Home /News /entertainment /

கன்னட நடிகருக்கு ரஜினிகாந்த் கொடுத்த சர்ப்ரைஸ்!

கன்னட நடிகருக்கு ரஜினிகாந்த் கொடுத்த சர்ப்ரைஸ்!

ரக்‌ஷித் - ரஜினிகாந்த்

ரக்‌ஷித் - ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டாரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்பது மிகவும் அற்புதமானது.

    கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை ஃபோனில் அழைத்து அவரது 777 சார்லி படத்தைப் பாராட்டியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    777 சார்லியின் வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் ரக்‌ஷித் ஷெட்டிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் ஃபோன் அழைப்பு வந்துள்ளது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருக்கும் ரக்‌ஷித், அதில் ரஜினிகாந்திற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

    "இந்த நாளின் ஆரம்பம் அற்புதமானது! ரஜினிகாந்திடம் இருந்து அழைப்பு வந்தது. நேற்றிரவு அவர் 777 சார்லியைப் பார்த்து பார்த்து வியந்துள்ளார். படத்தின் மேக்கிங் தரமாக இருப்பதாகவும், படத்தின் ஆழமான வடிவமைப்புகள், குறிப்பாக க்ளைமாக்ஸிற்கான தனது பாராட்டையும் வெளிப்படுத்தினார்” எனப் பதிவிட்டிருந்தார் ரக்‌ஷித்.

    10 வருடங்களுக்குப் பிறகு பிறந்தநாளில் வேலை செய்த விஜய்... காரணம் என்ன தெரியுமா?

    அவர்களின் தொலைபேசி அழைப்பு ஆன்மீக குறிப்பில் முடிந்ததாகவும் ரக்‌ஷித் குறிப்பிட்டுள்ளார். "சூப்பர் ஸ்டாரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்பது மிகவும் அற்புதமானது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்" என்று கிரிக் பார்ட்டி நடிகர் ரக்‌ஷித் ட்வீட் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஒரு தனிமையான தொழிற்சாலை தொழிலாளி மற்றும் ஒரு லாப்ரடோர் நாய் இடையேயான பயணத்தையும் பிணைப்பையும் 777 சார்லி படம் காட்டுகிறது. இதில் சார்லி என்ற டைட்டில் ரோலில் லாப்ரடோர் நாய் நடித்துள்ளது. மேலும் ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி. ஷெட்டி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரும் நடித்துள்ளனர்.

    நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலர் தான் ரக்‌ஷித் ஷெட்டி. இவருக்கும் 2017-ல் நிச்சயதார்த்தம் நடைப்பெற்று, 2018-ல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி