நடிகர் ரஜினிகாந்த் டாணாக்காரன் படத்தைப் பார்த்து விட்டு தன்னை பாராட்டியதாக நடிகர் விக்ரம் பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காவலர் பயிற்சிப் பள்ளியை மையப்படுத்தி அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ள திரைப்படம் 'டாணாக்காரன்'. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த 8-ஆம் தேதி வெளியான இப்படம் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதன ராவ், அஞ்சலி நாயர், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Beast Story: வீரராகவனாக விஜய்... பீஸ்ட் கதை இதுதான்!
எளியோருக்கு உற்றவர்களாக இருக்க வேண்டிய போலீஸ்காரர்கள் அதிகார மட்டத்தில் இருப்பவர்களால் எப்படி மாற்றப்படுகிறார்கள் என்பதையும், சேவை மனப்பான்மை உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்பதையும் இப்படம் காட்டியிருந்தது.
தமிழால் இணைவோம்... சிம்பு, அனிருத் ட்வீட்டின் பின்னணி இதுதான்!
இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், விக்ரம் பிரபுவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள விக்ரம் பிரபு, “சூப்பர் ஸ்டார் அவர்களே எனது நடிப்பை பாராட்ட அழைப்பது எவ்வளவு பெரிய உணர்வு. நான் கனவு கூட காணத ஒன்றை சாதித்தேன். உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றினால், வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகள் உண்டாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.