சிவகார்த்திகேயனின் டான் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவில் தானே ஒரு நட்சத்திரமாகத் திகழும் நடிகர் சிவகார்த்திகேயன், தொலைக்காட்சியில் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கியதில் இருந்து, பலமுறை ரஜினியின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நல்ல படங்களையும், படத்தில் பணியாற்றிய குழுவினரையும் எப்போதும் பாராட்ட தவறாத சூப்பர் ஸ்டார், அட்லீயிடம் அசோசியேட்டாக பணியாற்றிய அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டான்' படத்தை பார்த்தது போல் தெரிகிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள இப்படம் மே 13, 2022 அன்று திரைக்கு வந்தது. படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக சிவகார்த்திகேயன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தெரிகிறது. “சூப்பர், சூப்பர், பிரமாதம். மிக நல்ல நடிப்பு. 30 நிமிடங்களாக என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
22 Years of Kushi: விஜய் - ஜோதிகாவின் குஷி வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் கல்லூரிப் பின்னணியில் அமைந்த காமெடி பொழுதுபோக்குப் படமாக வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுடன் ஏழாவது முறையாக அனிருத் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.