Home /News /entertainment /

இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்... மாதவனின் ராக்கெட்ரி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்... மாதவனின் ராக்கெட்ரி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

மாதவன் - ரஜினிகாந்த்

மாதவன் - ரஜினிகாந்த்

ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாதவன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். 

நடிகர் மாதவன் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் ராக்கெட்ரி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ராக்கெட்ரி படம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு ஆளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்மபூஷன் நம்பி நாராயணன் வரலாற்றை மிக தத்துரூபமாக நடித்து இயக்கியுள்ளார் மாதவன். இயக்குநராக முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனர்களுக்கு இணையானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்தப் படத்தை கொடுத்ததற்காக மாதவனுக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும் என ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்!



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஜினிகாந்த் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது,  தன்னை கவர்ந்த திரைப்பட குழுவினர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துவது வழக்கம். ஆனால் இந்த முறை ராக்கெட்ரி திரைப்படத்தை அறிக்கை மூலமாகவே பாராட்டியுள்ளார். மேலும் இளைஞர்கள் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: Actor Madhavan, Rajinikanth

அடுத்த செய்தி