• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Annaatthe Trailer: ’இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா’ - வெளியானது ’அண்ணாத்த’ ட்ரைலர்!

Annaatthe Trailer: ’இன்னைக்கு ஆரம்பிக்குது திருவிழா’ - வெளியானது ’அண்ணாத்த’ ட்ரைலர்!

அண்ணாத்த ட்ரைலர்

அண்ணாத்த ட்ரைலர்

அண்ணாத்த படத்தின் பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

  • Share this:
    ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. முன்னதாக அண்ணத்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’, ‘வா சாமி’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு, வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.



    தவிர, கடந்த திங்கட்கிழமை தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினி. தமிழ் சினிமாவில் இந்த உயரிய விருதைப் பெறும் மூன்றாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: