Home /News /entertainment /

Rajinikanth: ரஜினி படத்தை இயக்க தயாராகும் தனுஷ்?

Rajinikanth: ரஜினி படத்தை இயக்க தயாராகும் தனுஷ்?

ரஜினிகாந்த் - தனுஷ்

ரஜினிகாந்த் - தனுஷ்

தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

    ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. முன்னதாக அண்ணத்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’, ‘வா சாமி’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து நேற்று மாலை அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியாகியது. இதையடுத்து தீபாவளியை முன்னிட்டு, வெளியாகும் அண்ணாத்த படத்தை திரையில் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    இதையடுத்து ரஜினி அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அவரின் 169-வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    இதையடுத்து தனுஷ் இயக்கும் படத்திலும் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அவரது 170-வது படமாக இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி