Home /News /entertainment /

செஸ் நிறைவு விழா மேடையில் ஒலித்த ரஜினி-விஜய் பாடல்கள்!

செஸ் நிறைவு விழா மேடையில் ஒலித்த ரஜினி-விஜய் பாடல்கள்!

விஜய் - ரஜினி

விஜய் - ரஜினி

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைப்பெற்றது. இதில் இடம்பெற்ற விதவிதமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் பாடல்கள் இசைக்கப்பட்டன. 

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஜூலை 28-ம் தேதி துவங்கியது. இதில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000-க்கும் அதிகமான வீரர்கள் கலந்துக் கொண்டனர். மாமல்லபுரத்தில் நடைப்பெற்ற இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கடந்த 4 மாதங்களில் தமிழக அரசு செய்து முடித்தது.

    இதையடுத்து கடந்த 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. அதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள், இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி, தமிழர் வரலாறு குறித்து நடிகர் கமல் ஹாசன் குரலில் ஒலித்த தமிழ் மண், இணையத்தில் வைரல் ஹிட்டான என்ஜாய் எஞ்சாமி பாடல் என ஒலிம்பியாட் விழா களை கட்டியது.

    இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 9) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைப்பெற்றது. இதில் இடம்பெற்ற விதவிதமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.

    வடிவேலுவின் ஜாலி வீடியோவை பகிர்ந்த ராதிகா சரத்குமார்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக லேசர் லைட் மூலமாக இசைக்கலைஞர்கள் அந்தரத்தில் பறந்தபடி சாகசம் செய்து, கண்களுக்கும், காதுகளுக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தினர். அவர்கள் வாசித்த இசையில் ரஜினிகாந்தின் வெற்றி கொடி கட்டு பாடலும், விஜய்யின் ஆளப்போறான் தமிழன், சிங்கப்பெண்ணே ஆகியப் பாடல்கள் இடம்பெற்றன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Rajinikanth

    அடுத்த செய்தி