Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் ரஜினி - கமல்?

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் ரஜினி - கமல்?

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    தற்போது, 'பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மேடையை பகிர்ந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் இருவரும் கலந்துக் கொள்கிறார்களாம்.

    சென்னைக்கு மாற்றப்பட்ட அஜித்தின் ஏகே61 படப்பிடிப்பு

    'பொன்னியின் செல்வன்' தமிழ் கலாச்சாரத்தின் பொற்காலமாக கருதப்படும் புகழ்பெற்ற சோழ வம்சத்தை பற்றிய கதை என்பதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு மணிரத்னத்துடன் ரஜினி தளபதி படத்திலும், கமல் ‘நாயகன்’ படத்திலும் பணிபுரிந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கார்த்தி, சியான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஷோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், நிழல்கள் ரவி, ரஹ்மான், ஆகியோர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 1' படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் மற்றும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Rajinikanth

    அடுத்த செய்தி