ஹோம் /நியூஸ் /entertainment /

''ரஜினினு நினைச்சு கூட்டம் கூடிடுச்சு..'' பாகிஸ்தான் ரஜினி சொன்ன சுவாரஸ்ய கதை!

''ரஜினினு நினைச்சு கூட்டம் கூடிடுச்சு..'' பாகிஸ்தான் ரஜினி சொன்ன சுவாரஸ்ய கதை!

ரஜினி போல தொற்றம் கொண்ட பாகிஸ்தான் அரசு அதிகாரி

ரஜினி போல தொற்றம் கொண்ட பாகிஸ்தான் அரசு அதிகாரி

பாகிஸ்தானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் ரஜினி நேரில் சந்திக்க வேண்டும் என தனது ஆசையை கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல்களை பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் செய்து புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த். இந்தியாவில் சினிமா முகமாக திகழ்ந்து வருகிறார். உலகம் முழுவதும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே அவருக்கு பின்னாள் உள்ளது. இருப்பினும் அவரை போல உருவ தோற்றம், ஸ்டைலை வைத்து வெளியிட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  ரஹ்மத் காஷ்கோரி எனும் பாகிஸ்தானை சேர்ந்த நபர். சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் பலோசிஸ்தான் மாநிலத்தின் குவெட்டா நகரத்தை சேர்ந்த இவருக்கு 62 வயதாகிறது. இவர் பாகிஸ்தானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து தனது வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்திருக்கிறார். அப்போது பலரும் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்ததாக கூறுகிறார் ரஹ்மத்.

  இதையும் படிங்க: இன்று மாலை வெளியாகும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

  இதுபற்றி அவர் பேசுகையில்,"பணியில் இருந்தபோது நான் ரஜினி போல இருப்பதை உணரவில்லை. வேட்டைக்கு செல்லும்போது வீடியோக்கள் எடுத்து பகிரும்போது தான் பலரும் அதை சுட்டிக்காட்டினார்கள். என்னால் ரஜினிகாந்த் போல நடிக்க முடியாது. ஆனால், இந்தியாவின் மிக முக்கிய நடிகரான ரஜினி போன்ற முகத்தோற்றம் எனக்கு கிட்டியது கடவுளின் அருள் என்றே சொல்லுவேன். ஒருமுறை கராச்சியில் உள்ள மாலுக்கு சென்றிருந்தேன். அப்போது சிலர் என்னை சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முயற்சித்தனர். அப்போது சிலர், நீங்கள் ரஜினிகாந்தா? எனக் கேட்டனர். நான் ஆம், ஆனால் நான் பாகிஸ்தானை சேர்ந்தவன் எனக் கூறினேன்" என்றார்.

  மேலும், ரஜினி போலவே சிகை அலங்காரம், உடை தேர்வு ஆகியவற்றை மேற்கொள்ளும் ரஹ்மத்திற்கு இன்னொரு ஆசையும் இருக்கிறது. சூப்பர் ஸ்டாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் அது. இதனிடையே, இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Rajinikanth, Rajinikanth Fans