• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Richard Donner: புகழ் பெற்ற ‘சூப்பர்மேன்’ பட இயக்குநர் ரிச்சர்ட் டோனர் மறைவு

Richard Donner: புகழ் பெற்ற ‘சூப்பர்மேன்’ பட இயக்குநர் ரிச்சர்ட் டோனர் மறைவு

ரிச்சர்ட் டோனர்

ரிச்சர்ட் டோனர்

இன்று வரை சூப்பர்மேன் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு, ரிச்சர்ட் டோனரின் சூப்பர் மேன் படங்கள் தான் முன்னோடி படங்களாக கொண்டாடப்படுகின்றன.

  • Share this:
    புகழ் பெற்ற சூப்பர் மேன் படத்தை இயக்கிய ரிச்சர்ட் டோனர் காலமானார்.

    ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர், 1978-ல் வெளியான சூப்பர்மேன் படத்தை இயக்கி பிரபலமானார். இதையடுத்து சூப்பர் மேன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டு புகழ்பெற்றார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. இன்று வரை சூப்பர்மேன் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு, ரிச்சர்ட் டோனரின் சூப்பர் மேன் படங்கள் தான் முன்னோடி படங்களாக கொண்டாடப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Superman film director Richard Donner dies at 92
    சூப்பர்மேன் படப்பிடிப்பில்


    அதோடு லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களை இயக்கியவரும் இவரே. தவிர த ஓமன், த கூனீஸ், அசாசின்ஸ் உள்பட பல வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். இந்நிலையில் ரிச்சர்ட் டோனருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். அவருக்கு வயது 91. இதையடுத்து ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: