• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kamal Haasan: கமலின் ‘இந்தியன் 2’ சூப்பர் அப்டேட்!

Kamal Haasan: கமலின் ‘இந்தியன் 2’ சூப்பர் அப்டேட்!

இந்தியன் 2

இந்தியன் 2

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

  • Share this:
    நடிகர் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    நடிகர் கமல் ஹாசன் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நேரத்தில் அவரது இந்தியன் 2 படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கிரேன் விபத்து ஏற்பட்டதால், அத்துடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை ஹோல்டில் வைத்து விட்டு, ராம்சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்கத் தொடங்கினார்.

    இதையடுத்து இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்தது. அதன் பின் நடந்த் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என்றும், இதற்காக நடிகர் கமல் ஹாசன் 100 நாட்களை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: