பூஜையுடன் தொடங்கிய அஜித்தின் புதிய படத்தின் கதை இதுதான்?
பூஜையுடன் தொடங்கிய அஜித்தின் புதிய படத்தின் கதை இதுதான்?
அஜித்
Ajith New Movie | இயக்குனர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும் அஜித் இந்தமுறை தயாரிப்பாளரையும் மாற்றாமல் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த போனி கபூருக்கே இந்தமுறையும் கால்ஷீட் தந்துள்ளார்.
அஜித்தின் புதிய படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. போனி கபூர் இதனை தயாரிக்க, ஹெச்.வினோத் படத்தை இயக்குகிறார்.
இயக்குனர், தயாரிப்பாளருக்கு அஜித் மெனக்கெடுவதில்லை. இதற்கு முன்பு இயக்குனர் சிவாவின் வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். அதையடுத்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் நடித்தார். வலிமை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அஜித்தின் 61 வது படமான இதன் பூஜை இன்று நடந்தது.
இயக்குனர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும் அஜித் இந்தமுறை தயாரிப்பாளரையும் மாற்றாமல் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த போனி கபூருக்கே இந்தமுறையும் கால்ஷீட் தந்துள்ளார். வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அஜித் போன்ற முன்னணி நடிகரின் படத்தை தொடர்ந்து தயாரிப்பது வேறு மொழிகளில் சாத்தியமில்லை. நம் மாநிலத்தை சேர்ந்த ஆள்கள் இருக்கையில் வேறு மாநில தயாரிப்பாளருக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதா என்று கண்டனங்கள் எழும். தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் பூமி.
அஜித் படங்கள் மும்பை அல்லது, ஹைதராபாத்தில்தான் தயாராகும். இதனால் தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைகள் கிடைக்காது. இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடைபெற உள்ளது. இன்று பூஜை போட்டு மார்ச் 19 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி இந்தப் படம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.