ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விரைவில் புதுப்பேட்டை 2 படப்பிடிப்பு தொடங்கும்… இயக்குனர் செல்வராகவன் அறிவிப்பு

விரைவில் புதுப்பேட்டை 2 படப்பிடிப்பு தொடங்கும்… இயக்குனர் செல்வராகவன் அறிவிப்பு

நடிகர் - இயக்குனர் செல்வராகவன்

நடிகர் - இயக்குனர் செல்வராகவன்

Pudupettai 2 : கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பேட்டை 2 எப்போது வரும் என்ற கேள்வியை இயக்குனர் செல்வராகவன் எதிர்கொண்டு வந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  புதுப்பேட்டை 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று படத்தின் இயக்குனர் செல்வராகவன் இன்று அறிவித்துள்ளார்.

  செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த2006-ல் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக மாறியது.

  அப்பாவி இளைஞன் ஒருவன் சூழ்நிலைகளின் தாக்கத்தால் எப்படி தாதாவாக  உயர்கிறான் என்பது படத்தின் மையக்கரு. இந்த படத்தில் +2 மாணவன், அப்பாவி இளைஞன், இரக்கமற்ற தாதா என பல ரோல்களில் தனுஷ் நடித்திருப்பார்.

  தனுஷின் சினிமா பயணத்தில் புதுப்பேட்டை மிகப்பெரும் திருப்பத்தை கொடுத்தது.  முதல் பாகத்திலேயே  அடுத்த பாகம் வெளிவருவதற்கான லீட் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

  இதையும் படிங்க - கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியிட்ட படம் விக்ரம்.. கமல்ஹாசன் மகிழ்ச்சி 

  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பேட்டை 2 எப்போது வரும் என்ற கேள்வியை இயக்குனர் செல்வராகவன் எதிர்கொண்டு வந்தார்.

  இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் 2ம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்றும், அதில் புதுப்பேட்டை 2 திரைப்படம் முதலில் வரும் என்றும் கூறினார்.

  இதையும் படிங்க - பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை… அழகு முகம் கோரமாக மாறிய கொடுமை 

  இந்த அப்டேட் தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ஜெகமே தந்திரம், மாறன் சறுக்கலுக்கு பின்னர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு தனுஷ் தான் கதை எழுதியிருக்கிறார்.

  இந்த நிலையில் புதுப்பேட்டை 2 விரைவில் வரும் என செல்வராகவன் அப்டேட் கொடுத்திருப்பதால் இதற்காக தனுஷ் விரைவில் தயாராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Dhanush, Director selvaragavan