ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காந்தாராவைப் போன்று ஓ.டி.டி.யில் மிஸ் பண்ண கூடாத 7 சூப்பர் த்ரில்லர் படங்கள்…

காந்தாராவைப் போன்று ஓ.டி.டி.யில் மிஸ் பண்ண கூடாத 7 சூப்பர் த்ரில்லர் படங்கள்…

சூப்பர் த்ரில்லர் படங்கள்

சூப்பர் த்ரில்லர் படங்கள்

சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சூப்பர் த்ரில்லர் படங்களின் தொகுப்பு…

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கன்னடத்தில் உருவான காந்தாரா திரைப்படம் ரூ. 350 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனைப் போலவே சூப்பர் த்ரில்லர் படங்கள் ஓடிடியில் உள்ளன. அவற்றில் 7 முக்கிய படங்களை பார்க்கலாம்…

  ' isDesktop="true" id="835905" youtubeid="mvfvoCdPrII" category="cinema">

  ITTEFAQ – நெட் ஃப்ளிக்ஸ்…

  ஒரு இரட்டைக் கொலை நடக்கிறது. அதை மையப்படுத்திய கதை, படத்தின் கடைசி நிமிடம் வரையில் த்ரில்லிங்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அக்சய் கன்னா, சித்தார்த் மல்ஹோத்ரா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  ' isDesktop="true" id="835905" youtubeid="XliKkuxa_nA" category="cinema">

  எ டெத் இன் தி கஞ்ச் – அமேசான் ப்ரைம்

  1970களில் நடக்கும் பீரியட் கதை. அப்பாவி பையன் தன் தந்தையின் மரணம் குறித்த விசாரணையில் இறங்குகிறார். அப்போது ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள்தான் படத்தின் கதை. விக்ராந்த் மாஸி, திலோத்தமா ஷோம், ஓம் பூரி, தனுஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  ' isDesktop="true" id="835905" youtubeid="4MGReT9-cAg" category="cinema">

  புல் புல் – நெட் ஃப்ளிக்ஸ்

  20ஆம் நூற்றாண்டில் நடக்கும் பீரியட் கதை. இயற்கைக்கு மாறாக ஆண்கள் ஒரு கிராமத்தில் மரணம் அடைகின்றனர். சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

  ' isDesktop="true" id="835905" youtubeid="lXZPMb51IQU" category="cinema">

  ஏகே vs ஏகே – நெட் ஃப்ளிக்ஸ்

  அனில் கபூர் – அனுராக் கஷ்யப் இடையே நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை. நடிகரின் மகளை தோல்விப் பட இயக்குனர் கடத்தி விடுகிறார். அதன்பின் மகளை மீட்க தந்தை நடத்தும் போர்தான் இந்தப் படம்.

  ' isDesktop="true" id="835905" youtubeid="sN75MPxgvX8" category="cinema">

  தும்பாட் – அமேசான் ப்ரைம்

  1918 – 1947 களில் நடக்கும் கதை. புதையலை தேடும் குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை. அந்த புதையலை அமானுஷ்ய சக்திகள் பாதுகாக்கும். காந்தாரா படத்திற்கு இணையான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும்.

  ' isDesktop="true" id="835905" youtubeid="uc78PxSxXMg" category="cinema">

  ராத் அகேலி ஹே – நெட் ஃப்ளிக்ஸ்

  திருமணம் முடிந்த இரவன்று தேசபக்தர் ஒருவர் கொல்லப்படுகிறார். அதனை கண்டுபிடிக்கும் போலீஸ்காரராக பேட்ட பட வில்லன் நவாசுதீன் சித்தீகி நடித்திருப்பார். ராதிகா ஆப்தே, ஸ்வேதா திரிபாதி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ' isDesktop="true" id="835905" youtubeid="qBJ_UpyQw_s" category="cinema">

  ஆரண்ய காண்டம் – டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

  போதைப் பொருள் மூட்டை காணமால் போக, அந்த சம்பவம் கேங் வாரை ஏற்படுத்தி விடுகிறது. சம்பத், ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, யாஸ்மின் பொன்னப்பா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: OTT Release