அண்ணாமலை 28 ஆண்டுகள் வெற்றி கொண்டாட்டம்... தயாரிப்பு நிறுவனம் அறிவித்த சர்ப்ரைஸ்

அண்ணாமலை

அண்ணாமலை திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் ஒன்றை அறிவிக்கவுள்ளது.

  • Share this:
நடிகர் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் அண்ணாமலை திரைப்படமும் ஒன்று
தற்பொழுதும் அந்தத் திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. எளிமையான நடிப்பில் பால்காரனாக வலம் வரும் ரஜினிகாந்தின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை கட்டி இழுத்த திரைப்படம் அது.

அதுவும் இடைவேளையின் போது ரஜினிகாந்தின் வீடு தன் நண்பனாளையே இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு ரஜினி பேசும் மாஸ் வசனம் இன்றளவும் இளைஞர்களை உற்சாகமூட்டும் ஊக்கப்படுத்தும் ஒரு வசனமாகும். "அசோக் உன் காலண்டரில குறித்து வைத்துக் கொள்" என்று இளைஞர்கள் மத்தியில் தற்பொழுதும் அண்ணாமலையின் தாக்கம் இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ் கமெர்சியல் சினிமாவின் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஒரு படம் அண்ணாமலை. நடிகர் விஜய்யிடம் ஒரு முறை எந்த ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டதற்கு பட்டென்று அவர் சொன்ன பதில் அண்ணாமலை. முந்தைய தலைமுறை நடிகர்கள் நடிக்க வரும்போது பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசிக் காட்டி விட்டு நடிக்க வந்தார்கள். அடுத்த தலைமுறை முழுக்க அண்ணாமலைக்கு அடிமை.

Also Read : பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் மேதகு படத்தை சீமான் தடுக்க நினைக்கிறாரா? வைரலாகும் ஆடியோ

விஜய் நடிக்க வந்த புதிதில் அவர் அப்பாவிடம் நடித்து காட்டியதும் கூட அண்ணாமலை காட்சியை தான். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமான அண்ணாமலை இன்றோடு 28 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சுரேஷ் கிருஷ்ணாவின்  இயக்கத்தில் உருவான சிறந்த படைப்பு அண்ணாமலை. இந்த நிலையில் அப்படத்தை தயாரித்த கவிதாலயா ரசிகர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read : ஸ்டைலா சிம்பிளா அமெரிக்காவில் ரஜினிகாந்த் - வைரலாகும் படம்!

கவிதாலயா தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வசூல் சாதனை மற்றும் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்த அண்ணாமலை படத்தை கொண்டாடும் விதமாக உங்களுக்கு சிறப்பான தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கிறோம் என்று கவிதாலயா அறிவிப்பு வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: