Home /News /entertainment /

சிவாஜி வெளியாகி15 ஆண்டுகள் நிறைவு… ஆடியோ பதிவை வெளியிட்ட ரஜினிகாந்த்

சிவாஜி வெளியாகி15 ஆண்டுகள் நிறைவு… ஆடியோ பதிவை வெளியிட்ட ரஜினிகாந்த்

சிவாஜி படத்தில் ரஜினிகாந்த்

சிவாஜி படத்தில் ரஜினிகாந்த்

Sivaji Rajinikanth Audio : இயக்குனர் ஷங்கரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து 45 நிமிடங்கள் உரையாடியிருந்தார்.

    சிவாஜி திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றியையும்,  மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் 2007ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி 15 வருடங்களாகின்றன இந்த நிலையில்,  சிவாஜி திரைப்படத்தை வெற்றி குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் ஏ.விஎ.ம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய பிரமாண்ட திரைப்படம் சிவாஜி.  அந்த திரைப்படம் வசூல் ரீதியிலும் பெரும் வெற்றியடைந்தது. சிவாஜி வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தயாரிப்பாளர்,  இயக்குனர், படத்தில்  பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தை பெரும் வெற்றி ஆகிய ரசிகர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க - என்னுடைய 19 வயதில் இது நடக்கும் என நினைக்கவில்லை.. யாஷிகா போட்ட பதிவு!

    அந்த ஆடியோ பதிவை ஏவிஎம் நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆவதை ரசிகர்கள் 15 Years Of Sivaji என ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் நன்றி தெரிவிக்கும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இயக்குனர் ஷங்கரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து 45 நிமிடங்கள் உரையாடியிருந்தார்.



    அந்த சந்திப்பில் இருவரும் தற்போதைய சினிமா நிலை மற்றும் ராம் சரண் இயக்கத்தில் ஷங்கர் இயக்கும் படம் குறித்து பல விஷயங்களை விவாதித்துள்ளனர்.

    ’மீண்டும் உங்களை சந்திப்பேன்; என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமெரிக்கா புறப்படும் முன் டி.ஆர். கண்ணீர் மல்க பேட்டி 

    ராம் சரண் படத்தை முடித்துக் கொண்டு ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று ரஜினிகாந்த் தனது 169 வது படத்தின் ஷூட்டிங்கில் விரைவில் இணையவுள்ளார். இந்தப் படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார்.

    இன்று மாலை ஆடியோ பதிவை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆடியோ பதிவில் முக்கியமான அறிவிப்பு ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    Published by:Musthak
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி