ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’ PS படம் சூப்பர்’ ஜெயம் ரவிக்கு போன்போட்ட ரஜினிகாந்த்! மகிழ்ச்சியில் துள்ளும் அருண்மொழி வர்மன்!

’ PS படம் சூப்பர்’ ஜெயம் ரவிக்கு போன்போட்ட ரஜினிகாந்த்! மகிழ்ச்சியில் துள்ளும் அருண்மொழி வர்மன்!

ரஜினிகாந்தின் பாராட்டால் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர்.

ரஜினிகாந்தின் பாராட்டால் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் தொலைபேசி உரையாடல் குறித்து நடிகர் ஜெயம் ரவி டிட்டரில் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த திரைப்படம் குறைந்த நாளில் 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

அதேபோல் உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது படம் குறித்தும், படத்தில் உள்ளவர்களின் நடிப்பு குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் தொலைபேசி உரையாடல் குறித்து நடிகர் ஜெயம் ரவி டிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Dhanush-Aishwarya Rajinikanth: சந்திப்பிற்கு பிறகு தனுஷ்-ஐஸ்வர்யா எடுத்த முடிவு இதுவா?

நடிகர் ரஜினிகாந்தின் தொலைபேசி அழைப்பு தன்னுடைய நாளையும், வருடத்தையும் சிறப்பாக்கியதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் தன்னிடைய திரைப்பயணத்திற்கு புது அர்த்தம் கிடைத்துள்ளதாகவும் நெகிழ்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றியும் படத்தில் தன்னுடைய நடிப்பு பற்றியும் பாராட்டியது ஆசீர்வதிக்கப்பட்டது போல் உணர்வதாக கூறியுள்ளார்.

நாவலைப் படித்தவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறப்பாக வெளிவந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் மணி ரத்னம், ஏ.ஆர். ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை பிரபலப்படுத்தினர்.

வயது வெறும் நம்பர் தான்... ரம்யா கிருஷ்ணன் படங்களைப் பார்த்தால் புரியும்!

முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்திருப்பதால், அடுத்த பாகம் ரசிகர்கள் இன்னும் வியக்கும் வகையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Musthak
First published:

Tags: Ponniyin selvan, Rajinikanth