அண்ணாத்த படத்திற்கு பின்னர் ஓய்வில் இருக்கும் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் மெகா ஹிட்டானது. நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பக்கதை மற்றும் ஆக்சன் ஜேனரில் ரஜினிகாந்த் சிறப்பாக நடித்திருந்தார்.
சிவா இயக்கத்தில் உருவான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனது 169 வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது ரஜினியின் 169வது படத்திற்கு திரைக்கதை உருவாக்குதல் மற்றும் ப்ரீ புரொடக்சன் வேலைகளில் நெல்சன் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க - விக்ரம் பட பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் கமல்? - ஹிட்டாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது உடல்நல பரிசோதனைக்காகவும், நண்பர்களை சந்திப்பதற்காகவும் ரஜினி இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்காவில் சிறிது காலம் ஓய்வுக்கு பின்னர் ஆகஸ்டில் தொடங்கவுள்ள தனது 169வது படத்தின் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்கிறார்.
ரஜினியின் அமெரிக்க பயணத்தின்போது அவருடன் மகள் ஐஷ்வர்யா ரஜினிகாந்தும் உடன் செல்வர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாக்டரைத் தொடர்ந்து டான் படத்திலும் பிரியங்கா மோகன் இடம்பெற்றது எப்படி? – சிவகார்த்திகேயன் பதில்
பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து ரஜினியின் 169வது படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு நடிகை ஐஷ்வர்யா ராயிடம் பேசப்பட்டு வருகிறது. டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.