ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘ஃபைட் சீன்கள் மாஸ்ஸாக இருக்கும்’ – ரஜினியின் ஜெயிலர் பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்

‘ஃபைட் சீன்கள் மாஸ்ஸாக இருக்கும்’ – ரஜினியின் ஜெயிலர் பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஜெயிலர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

    அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த்ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் எண்ணூர் ஆகியப் பகுதிகளில் நடந்து வருகிறது. இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது 50 சதவீதம் முடிந்துள்ளது.

    இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜெயிலர் படத்தில் சண்டை காட்சிகளின் இயக்குனராக ஸ்டன்ட் சிவா பணியாற்றியுள்ளார்.

    சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…

    சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினியின் சண்டைக் காட்சிகள் ஜெயிலர் படத்தில் அமைய வேண்டும் என்று இயக்குனர் நெல்சன் சொன்னார். அதன்படி, எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு மாஸ்ஸாக சண்டைக் காட்சிகள் வந்துள்ளன.

    காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமாகி வரும் பூஜா ஹெக்டே… லைக்ஸை குவிக்கும் புதிய ஃபோட்டோ…

    3 சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளோம். இன்னும் சில ஆக்சன் சீன்கள் இருக்கின்றன. எந்த சண்டை காட்சிகளிலும் இடம்பெறாத வகையில் ஜெயிலர் ஆக்சன் சீன்கள் அமைந்திருக்கும். அதற்காக இயக்குனர் நெல்சன் கடினமாக உழைத்திருப்பதாக கூறியுள்ளார். ஸ்டன்ட் சிவாவின் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood