ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூப்பர் ஃபாஸ்ட்டில் செல்லும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்… இயக்குனர் நெல்சன் அப்டேட்…

சூப்பர் ஃபாஸ்ட்டில் செல்லும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்… இயக்குனர் நெல்சன் அப்டேட்…

ஜெயிலர்

ஜெயிலர்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆக்சன் திரைப்படமாக ஜெயிலர் உருவாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் வெளியிட்டுள்ளார்.

  அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த்ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

  இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் எண்ணூர் ஆகியப் பகுதிகளில் நடந்து வருகிறது.

  ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்? உதயநிதி ஸ்டாலின் பதில்…

  ஜெயிலர் படத்தில் சண்டை காட்சிகளின் இயக்குனராக ஸ்டன்ட் சிவா பணியாற்றியுள்ளார்.

  எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு மாஸ்ஸாக சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக ஸ்டன்ட் சிவா கூறியிருந்தார். இந்நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 3 முக்கிய சண்டை காட்சிகள் உள்பட 50 சதவீத ஷூட்டிங் முடிந்து விட்டதாக கூறியுள்ளார். தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

  லைக்ஸ் அள்ளும் ஷிவானி நாராயணனின் ரீல்ஸ் வீடியோ..

  அதிவேகத்தில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வரும் இயக்குனர் நெல்சனை ரஜினி ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அல்லது கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Rajinikanth