சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இசைஞானி இளையராஜாவும் சந்தித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஜூன் 2ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவரது இசை நிகழ்ச்சி கோவையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு சென்ற இளையராஜா அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சினிமா மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்து இருவரும் ரிலாக்ஸாக பேசியுள்ளனர்.
இதையும் படிங்க - வயிற்றில் ரத்த கசிவு, அப்பாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் - சிம்பு அறிக்கை
இதன்பின்னர், இளையராஜா அவசராக கிளம்ப, சாமி எதாச்சும் வேலை இருக்கிறதா என்று அவரிடம் ரஜினி கேட்டுள்ளார். (இளையராஜாவை ரஜினி எப்போதும் சாமி என்றுதான் அழைப்பார்.) அதற்கு அவர், கோவை இசை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது என்று பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, ராஜாவை காரில் அழைத்து அவரது ஸ்டூடியோவுக்கு சென்ற ரஜினி, அங்கு ஒத்திகையை பார்வையிட்டார். அப்போது ராஜா ஒத்திகை பணிகளை மேற்கொள்ள, இரண்டு மூன்று பாடல்களுக்கு ரஜினிகாந்த் கைத்தட்டி ரசித்துள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க - தனுஷின் தி க்ரே மேன் படத்திற்கு ஸ்பெஷல் எமோஜி அளித்த ட்விட்டர்
கடைசியாக 1994-ல் வெளிவந்த வீரா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – இளையராஜா கூட்டணி சேரவில்லை. இதன்பின்னர் ரஜினிகாந்த், தேவா, ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர், அனிருத், இமான் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இளையராஜாவும், ரஜினியும் சந்தித்துக் கொண்டது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.