முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “அரசியலுக்கு வராதது இதனாலதான்... வேற எந்த காரணமும் இல்ல”- ரஜினிகாந்த் விளக்கம்..!

“அரசியலுக்கு வராதது இதனாலதான்... வேற எந்த காரணமும் இல்ல”- ரஜினிகாந்த் விளக்கம்..!

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நான் அரசியலுக்கு வராததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் 90 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் துவங்கியது.

இதனையடுத்து லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குநர்  ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை ரஜினிகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து சென்னை தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், கவனமாக பேச வேண்டும் என தெரிவித்துக்கொண்டு, முன்னாள் துறை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கடந்து வந்த பாதையை குறிப்பிட்டார். மேலும், “நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா அலை தொடங்கிவிட்டது. நான் அந்த சமயத்தில் வெளியே சென்றால் உடல் நலம் பாதிக்கும்.

என் உடல்நிலைக்கு மாஸ்க் கண்டிப்பாக வேண்டும். 10அடி தள்ளி இருக்க வேண்டும் என மருத்துவர் கூறினார். ஆனால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் அரசியலில் இருந்து விலகினேன். ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன என தெரிவித்தார். மேலும் ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியாது என தெரிந்தும், சிலர் கடவுள் இல்லை என்று கூறுகின்றனர் என்று கூறினார்.

First published:

Tags: Rajini Kanth, Rajinikanth, Rajinikanth politics