முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினி பிறந்த நாளையொட்டி 73 கிலோவில் உருவாக்கப்பட்ட கேக்… ரசிகர்கள் கொண்டாட்டம்…

ரஜினி பிறந்த நாளையொட்டி 73 கிலோவில் உருவாக்கப்பட்ட கேக்… ரசிகர்கள் கொண்டாட்டம்…

73 கிலோ எடைகொண்ட கேக்

73 கிலோ எடைகொண்ட கேக்

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கியமான அப்டேட் ரஜினியின் பிறந்த நாளான நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி 73 கிலோ அளவிலான கேக்கை உருவாக்கி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள், அன்னதானம், கோவில், மத வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்டவை ரசிகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் இன்று 73 கிலோ அளவிலான கேக்கை வெட்டி ரஜினி பிறந்த நாளை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH – விஜய் ஆன்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தின் ட்ரெய்லர்…

ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில் பல்வேறு பிறந்தநாள் ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இதற்கிடையே மீண்டும் வெளியிடப்பட்ட பாபா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதில் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட பாபா திரைப்படம் முன்பு வெளியானதை விட சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

WATCH – கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 படத்தின் அறிமுக டீசர்…

தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் முக்கியமான அப்டேட் ரஜினியின் பிறந்த நாளான நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று திரையுலகத்தினர் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

First published:

Tags: Rajinikanth