ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியை கவர்ந்த ‘விக்ரம்’ திரைப்படம்… போனில் தொடர்புகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து

ரஜினியை கவர்ந்த ‘விக்ரம்’ திரைப்படம்… போனில் தொடர்புகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து

ரஜினியுடன் கமல்

ரஜினியுடன் கமல்

Rajinikanth Vikram Movie : விக்ரம் படக்குழுவினரை போனில் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விக்ரம் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கமலஹாசன் உள்ளிட்ட படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

கமலஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 22 கோடி ரூபாய் வசூல் செய்தது. உலக அளவில் முதல் நாள் வசூல் ரூ. 50 கோடியை தாண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் இரண்டு நாளிலும் பெரும் வசூலை ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது.  இரு நாட்களில் ஒட்டுமொத்த வசூல் ரூ. 100 கோடியை தாண்டி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் புதிய முயற்சியை கையில் எடுத்த லோகேஷ் கனகராஜ்… தொடர் வெற்றி சாத்தியமாகுமா?

இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.  இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விக்ரம் திரைப்படத்தை பார்த்த பின்பு நடிகர் கமலஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர்  அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விக்ரம் படத்தில் பல ட்விஸ்டுகள், டேட்டாக்கள், எமோஷன், சென்டிமென்ட் என அத்தனையையும், மிக நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதையும் படிங்க - 30 மொழிகளில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் வெப் சீரிஸ்!!

சமீப ஆண்டுகளில் கமலை இந்த அளவுக்கு ஒரு இயக்குனரால் பயன்படுத்தியிருக்க முடியுமா அல்லது அவருக்கு இதுபோன்ற ஒரு மாஸ்ஸான கேரக்டரை வழங்க முடியுமா என்ற ஆச்சரியத்தில் கமலின் ரசிகர்கள் உள்ளார்கள்.

அடுத்த சில வாரங்களுக்கும் விக்ரம் படம் தியேட்டர்களில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிக அதிகமான வசூலை விக்ரம் எட்டும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வெளியாவதற்கு முன்பாக அதற்கு மிக அதிகமான பொருட் செலவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதனால் ஒரு விதமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட நிலையில், அதனை பன் மடங்கு பூர்த்தி செய்யும் விதமாக விக்ரம் வெளிவந்துள்ளது.

First published:

Tags: Kamal Haasan, Rajinikanth, Vikram