Home /News /entertainment /

ரஜினியும் கமலும்... தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்!

ரஜினியும் கமலும்... தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்!

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

Rajinikanth - Kamal Haasan | ரஜினிகாந்த் கமல்ஹாசன் தலைமுறைக்கு பின் பல இளம் கதாநாயகர்கள் வெள்ளித்திரையில் முளைத்தார்கள்

    தலைமுறைகள் கடந்தும் இன்றும் உச்ச கதாநாயகர்களாய் வலம் வருபவர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் . இவர்களைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு. 

    தமிழ் சினிமாவின் 40 ஆண்டு கால இரட்டைகுழல் தூப்பாக்கி ரஜினிகாந்தும் கமல்ஹாசனும். நூற்றாண்டு கால தமிழ் சினிமாவின் அறுபதாண்டு கால பொக்கிஷம் கமல்ஹாசன். 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளை சினிமாத்துறைக்காக அர்ப்பணித்து கொண்டிருக்கும் நாயகன்தான் கமல்ஹாசன். இப்படி கமல் ஆறிலிருந்து அறுபது வரை தமிழ் சினிமாவில் பங்கெடுத்து கொண்டிருக்க அபூர்வ ராகங்களில் அறிமுகமாகி ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்தில் சிறந்த நடிகனாக ஜொலித்து தனக்கே உரிய ஸ்டைல் நடிப்பினால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த்.

    இதையும் படிங்க.. SK birthday: சின்னத்திரை டூ வெள்ளித்திரையில் தடம் பதித்த குழந்தைகளின் சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன்!

    ரஜினிகாந்த் கமல்ஹாசன் தலைமுறைக்கு பின் பல இளம் கதாநாயகர்கள் வெள்ளித்திரையில் முளைத்தார்கள்.. அதில் பலர் மின்னலாய் மறைந்தும் போனார்கள். ஆனால் இன்றும் வெள்ளித்திரையின் வசூல் ராஜாக்களாய் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இருந்து வருவதை பார்க்கலாம். இளம் இயக்குனர்களின் கனவு ஹீரோக்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனுமே என்றானது. அந்த வகையில் இளம் இயக்குனரான பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கபாலி..காலா என இரண்டு திரைப்படங்களில் நடித்து ஆச்சரியப் படுத்தினார் ரஜினிகாந்த்.



    முன்னணி சினிமா நாயகர்களான இவர்களிருவரின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இல்லாமல் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக பார்க்காமல் அவர்களிருவரையும் இன்று வரை உச்சத்தில் வைத்துள்ளது தமிழ் சினிமா. 60 வருடங்களுக்கு முன்பு ’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என பாடிய சிறுவன் கமல்ஹாசன் இன்றும் உலக நாயகனாக சகல கலா செய்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. Cook With Comali 3 : ஸ்ருதிகாவுக்கு அப்படி என்ன மெசேஜ் வந்தது? ரசிகர்களுக்காக அவரே சொன்ன உண்மை!

    விஜய் நடிப்பில் வந்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனரானவர் லோகேஷ் கனகராஜ்.. கைதியில் கார்த்தி.. மாஸ்டரில் விஜய் என கடந்து அவரின் இலக்கும் கமல்ஹாசனானார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் தற்போது கமல்ஹாசன் நாயகனாக நடித்து வருவது சொல்கிறது இன்றும் என்றும் சகலகலா வல்லவன் கமல்ஹாசன் என.



    கமல்ஹாசனுக்கு ஒரு லோகேஷ் கனகராஜை போல் ரஜினிகாந்துக்கு தற்போது அமைந்தார் இயக்குனர் நெல்சன். சிவ கார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கிய நெல்சனின் இலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளிவந்து வைரலாகி சொன்னது தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Kamal Haasan, Kollywood, Rajinikanth

    அடுத்த செய்தி