ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் இயக்குநர் ஷங்கர்… ஒரே நாளில் படங்கள் ரிலீஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் இயக்குநர் ஷங்கர்… ஒரே நாளில் படங்கள் ரிலீஸ்?

ஷங்கர் - ரஜினிகாந்த்

ஷங்கர் - ரஜினிகாந்த்

ரஜினி - இயக்குனர் ஷங்கர் இருவரின் கூட்டணியில் சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரணின் 15-வது படம் ஆகியவை ஒரே நாளில் வெளியாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

  ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் அடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

  இதற்கிடையே ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலமாக மிகப் பெரும் சரிவை சந்தித்துள்ளார். இந்தப்படத்தின் மோசமான ரிசல்ட்டுக்காக விஜய் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனை திட்டி தீர்த்தனர். இந்நிலையில் அவர் ஜெயிலர் படத்தை ரஜினியை வைத்து இயக்கி வருகிறார்.

  குழந்தைகளுக்கு கமகம பிரியாணி! பிக்பாஸ்-ல் இருந்து வெளியே வந்து வீடியோ வெளியிட்ட ஜிபி முத்து!

  அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதேபோன்று தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் - இயக்குனர் ஷங்கர் காம்போவில் ராம்சரணின் 15வது படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

  இன்னும் பெயரிடப்படாத நிலையில் RC 15 என ஒர்க்கிங் டைட்டிலை வைத்து ஷூட்டிங்கை படக்குழுவினர் நடத்துகின்றனர். அரசியல் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக்கப்படுகிறது.

  இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் ராம்சரணின் 15வது படம் ஆகியவை ஒரே நாளில் வெளியாக அதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிக்கும் - இயக்குனர்  ஷங்கருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படப்போகிறது. இருவரின் கூட்டணியில் சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

  தொடங்கியது தீப திருநாள் கொண்டாட்டம்.. சூப்பரான 10 தீபாவளி பாடல்கள் லிஸ்ட்!

  அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியை குறிவைத்து ரஜினியின் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இதேபோன்று ஏப்ரல் 13-ஆம் தேதி ராம்சரணின் 15வது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் வாரிசு படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் ராம்சரணின் 15 வது படத்தை தயாரித்து வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Director Shankar, Rajinikanth