• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பல் மருத்துவரானார் சூப்பர் சிங்கர் பிரியங்கா

பல் மருத்துவரானார் சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மருத்துவ பணியை தொடங்கியுள்ளார்.

  • Share this:
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் பிரியங்கா. அதில் டாப் போட்டியாளராக இடம்பிடித்த அவர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகவில்லை. ஆனாலும் அவரது குரல் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானது. சின்னச் சின்ன வண்ணக் குயில் பாடலின் பிரியங்கா வெர்ஷன் என்று யூடியூபில் தேடிப் பார்க்கும் அளவுக்கு தனது குரல் வளத்தால் வசீகரித்தவர்.

இதைத்தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இடையில் பாடல்கள் பாடியிருக்கும் பிரியங்கா மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யுடன் மேடை நிகழ்ச்சி ஒன்றிலும் பாடியுள்ளார். பாடகியாக புகழ் பெற்ற பிரியங்கா தொடர்ந்து மருத்துவ படிப்பையும் தொடர்ந்து வந்தார்.

2018-ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த அவர் மருத்துவமனை தொடங்கலாம் என்று நினைத்தபோது கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமாகி ஊரடங்கு அமலானது. இந்நிலையில் தற்போது மருத்துவ பணியை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டுள்ளார். அவரது பதிவைப் பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



பாடகி, டாக்டர் என இருவேறு துறைகளில் பிஸியாக இருக்கும் பிரியங்காவுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் தனக்கு நடிப்பு சரிவராது என்பதால் மறுத்துவிட்டதாகவும் பிரியங்கா இணைய ஊடக பேட்டிகளில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: