’சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் புதிய பாடல் வெளியானது!

’சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் புதிய பாடல் வெளியானது!
சூப்பர் டீலக்ஸ்
  • News18
  • Last Updated: June 18, 2019, 1:00 PM IST
  • Share this:
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு மனைவியாக நடிகை காயத்ரியும், மகனாக அஸ்வந்தும் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றது. ஆனாலும் இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.


இந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில் நடைபெறவுள்ள ஃபேண்டசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.படத்தில் பாடல்கள் இடம்பெறாத நிலையில், படத்தின் காட்சிகளை பயன்படுத்தி பின்னணி பாடலாக ஒலித்த ‘ஐ எம் ஏ டிஸ்கோ டான்ஸர்’ என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மாண்டாஜ் பாடலாக வெளிவந்துள்ள இந்தப் பாடல் 2 நிமிடம் 28 விநாடிகள் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது.
First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்