சென்னை பாஷையில் அழகாக திட்டிய சமந்தா! - சூப்பர் டீலக்ஸ் வீடியோ

சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தணிக்கைக் குழு அதிகாரிகள் 'A'சான்றிதழ் வழங்கியுள்ளனர்

Web Desk | news18
Updated: March 26, 2019, 6:53 PM IST
சென்னை பாஷையில் அழகாக திட்டிய சமந்தா! - சூப்பர் டீலக்ஸ் வீடியோ
நடிகை சமந்தா
Web Desk | news18
Updated: March 26, 2019, 6:53 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்தின் புதிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் விஜய் சேதுபதி கூறும் புலி கதை இடம்பெற்றிருந்தது. ட்ரெய்லரின் இறுதியில் "ஒரு நொடி.. பாம்பாவது... பள்ளமாவது... புலியாவது... உசுரு போனா மசுரு போச்சுனு.. கவலையே படாமல் நாக்கை நீட்டி தேனை நக்கி.. ஆஹான்னு சொன்னா” என்ற வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.ஆரண்ய காண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இந்தப்படத்தை இயக்குவதாலும், விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமந்தா நடித்த காட்சிகள் படமாக்கப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பேசியிருக்கும் சிம்பு, வேம்பு கதாபாத்திரம் எனக்கு பயத்தை கொடுத்தது. ஆனால் அந்த பயத்தில்தான் எனக்கு கிக் இருந்தது. தமிழ்சினிமாவில் நாயகிகளுக்கென ஒருகதை உருவாக்கத்தை வைத்திருப்பார்கள். அதை எல்லாம் மாற்றி எழுதியது தான் வேம்பு கதாபாத்திரம்” என்று கூறியுள்ளார்.
Loading...


மேலும் அந்த வீடியோவில் சென்னை பாஷையில் அவர் திட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு அதிகாரிகள் 'A'சான்றிதழ் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.Also Watch:
First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...