தனது பெயரை கையில் பச்சை குத்தியுள்ள ரசிகர் குறித்த தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பிரபல நடிகை சன்னி லியோன், விரைவில் உங்கள் மனைவியை கண்டுபிடிக்க வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய பூர்வீகத்தை சேர்ந்த சன்னி லியோன் சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அதன்பக்கம் கவனம் செலுத்திய சன்னி லியோன், பின்னர் ஆபாச படங்களிலும் (porn movies) நடிக்க தொடங்கினார். இதன் காரணமாக அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
கடந்த 2011-ல் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பர் என்பவரை சன்னி லியோன் திருமணம் செய்துகொண்டார். மேலும், ஆபாச படங்களிலும் நடிப்பதை நிறுத்திய சன்னி லியோன் இந்தியாவுக்கு குடிபுகுந்தார். பாலிவுட் படங்களில் அவர் நடித்து வருகிறார். ஜிசம் 2, ராகினி எம்எம்எஸ் 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இதையும் படிங்க: நயன்தாரா படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்கள்!
இந்நிலையில், அண்மையில் படப்பிடிப்பில் சன்னி லியோன் பங்கேற்றப்போதுஅவரை சந்தித்த ரசிகர் ஒருவர், தனது கையில் சன்னி லியோன் என பச்சை குத்தி இருப்பதை காட்டியுள்ளார். இதனால் நெகிழ்ந்துபோன, இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், மிகவும் அற்புதமாக இருக்கிறது... மிக்க நன்றி என்று அந்த இளைஞரிடம் சன்னி லியோன் கூறியுள்ளார். மேலும், நீங்கள் எப்போதும் என்னை காதலித்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். ஆனால் இப்போதைக்கு உங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. நல்ல மனைவியை கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.