முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சன்னி லியோன் உடன் நடிக்கும் நடிகர் சதீஷ்

சன்னி லியோன் உடன் நடிக்கும் நடிகர் சதீஷ்

சன்னி லியோன் - நடிகர் சதீஷ்

சன்னி லியோன் - நடிகர் சதீஷ்

தமிழில் வரலாற்று பின்னணியில் உருவாகும் நகைச்சுவை திகில் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் சன்னி லியோன்.

  • Last Updated :

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் நடித்திருக்கும் இவர் அடுத்ததாக வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் அடுத்ததாக புதிய தமிழ்ப்படமொன்றில் ஹீரோயினாக நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். ‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் திகில் நகைச்சுவை ஜானரில் உருவாக உள்ளது. இந்தப் படத்தின் மையக்கதாபாத்திரம் கிளியோபாட்ரா போல வலிமையாக இருப்பதால் சன்னி லியோனை நடிக்க வைக்க முடிவெடுத்ததாகவும், அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் இயக்குநர் யுவன் தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன் உடன் நடிகர் சதீஷ், ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு மாநகரம் படத்தின் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார்.

சன்னி லியோன் உடன் வரலாற்று பின்னணி கொண்ட ஹாரர் காமெடி படத்தில் தான் நடிக்க இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் சதீஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Actor Sathish, Kollywood, Sunny Leone