முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஸ்டைலாக உடற்பயிற்சி செய்யும் சன்னி லியோன் - வைரல் வீடியோ!

ஸ்டைலாக உடற்பயிற்சி செய்யும் சன்னி லியோன் - வைரல் வீடியோ!

நடிகை சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன்

இன்ஸ்டாகிராமில் சன்னி லியோனை 47.8 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். அவர் ஷேர் செய்துள்ள உடற்பயிற்சி செய்யும் யோகா மில்லியன் கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது

நடிகை சன்னி லியோனை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே கூறலாம். இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் நடிகையாக இவர் இருக்கிறார். ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன், தற்போது அதிலிருந்து வெளியேறி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். மேலும் ஒரு சில படங்களில் ஒரு சில பாடல்களில் மட்டும் நடித்து வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சன்னி லியோனுக்கு எண்ணற்ற ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் 40 வயதை எட்டிய சன்னி லியோன் இப்போதும் இளமையாக இருக்கிறார். மேலும் இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். இப்போதும் இளமையாக இருப்பதற்கான ரகசியம் குறித்து சமீபத்தில் விளக்கிய சன்னி லியோன், உடற்பயிற்சி செய்வது, குறைவான கலோரி உணவுகளை சாப்பிடுவது என்கிறார். மேலும் நான் ஒரு உணவு பிரியர் ஆனால் எனது பிட்னஸை சரியாக பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்வேன் எனக் கூறும் சன்னி லியோன், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அந்த புகைப்படத்தில், என்னை எப்போதும் உடற்பயிற்சி செய்து நன்றாக இருக்க தூண்டியதற்கு நன்றி @mandeepkaursandhu_ லவ் யூ, வாழ்க்கைக்கு தேவை ஹாட் யோகா என்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை சமநிலை செய்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)மேலும் அதில் நீல நிற டைட்ஸ் மற்றும் டர்க்கைஸ் டேங்க் டாப் அணிந்து பல்வேறு ஆசனங்களை செய்வதைக் காணலாம். இன்ஸ்டாகிராமில் சன்னி லியோனை 47.8 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். தற்போது அவர் ஷேர் செய்துள்ள உடற்பயிற்சி செய்யும் யோகா மில்லியன் கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. படத்தில் நடித்து வந்தாலும் அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்யும் சன்னி லியோன் எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)இதனிடையே நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா நடிக்கும் ஒரு திகில் காமெடி திரைப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் இசையமைக்கிறார். நகைச்சுவை-திகில் காட்சிகளின் கலவையாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.

மேலும் தமிழ் திரைப்பட இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வீரமாதேவி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாதேவி என்ற ராணியின் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இதில் வீரமாதேவியாக நடிகை சன்னிலியோன் நடித்து வருகிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actress Sunny Leone, News On Instagram, Sunny Leone, Yoga