ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இது தான் என் நிரந்தர வீடு... எமோஷனலான சன்னி லியோன்!

இது தான் என் நிரந்தர வீடு... எமோஷனலான சன்னி லியோன்!

குழந்தைகளுடன் சன்னி லியோன்

குழந்தைகளுடன் சன்னி லியோன்

எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் எனது அழகான மருமகள் மற்றும் எனது இரண்டு நண்பர்கள் என எனது இதயத்தின் ஒருபகுதி இன்னும் அமெரிக்காவில் தான் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அமெரிக்காவில் இருக்கும் தனது குடும்பத்தை மிஸ் செய்வதாகவும் ஆனால் இந்தியா தான் தனது நிரந்தர வீடு எனவும் குறிப்பிட்டுள்ளார் நடிகை சன்னி லியோன்.

  சன்னி லியோன் தனது தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் பிஸியாக இருக்கிறார். ஆனால் அவர் என்ன செய்தாலும் எல்லா நேரங்களிலும் மங்காமல் இருப்பது அவருடைய புன்னகை தான். அவர் இப்போது டேட்டிங் ரியாலிட்டி ஷோ-வான ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 14-ன் தொகுப்பாளராக மாறியுள்ளார். அர்ஜுன் பிஜ்லானியுடன் இணைந்து அவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

  அதுமட்டுமின்றி, அவர் தற்போது இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு விரைவில் வெளியாகவிருக்கும், ஓ மை கோஸ்ட் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயாக, குடும்ப விஷயங்களையும் பார்த்துக் கொள்கிறார் சன்னி லியோன். அவரது மகள் நிஷா மற்றும் இரட்டை மகன்கள் நோவா மற்றும் ஆஷர் ஆகியோர் சன்னி லியோனுடன் ஒரு பாடலுக்கு நடனமாட விரும்புகிறார்களாம்.

  தந்தையாகப் போகும் அஜித் பட நடிகர் - குவியும் வாழ்த்துகள்!

  இந்நிலையில் சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில், கடந்த ஆண்டு நீங்கள் ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தீர்கள். உங்கள் மகிழ்ச்சியான இடத்தை இந்தியாவில் கண்டுபிடித்துவிட்டீர்களா அல்லது உங்கள் இதயம் இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கிறதா? என சன்னி லியோனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் எனது அழகான மருமகள் மற்றும் எனது இரண்டு நண்பர்கள் என எனது இதயத்தின் ஒருபகுதி இன்னும் அமெரிக்காவில் தான் உள்ளது. பொருட்களைப் பொறுத்தவரை, முற்றிலும் இல்லை. என் நண்பர்களையும், குடும்பத்தினரையும் மிஸ் செய்கிறேன். அது தவிர, இது தான் என் வீடு. நான் இங்கு தான் இருக்க விரும்புகிறேன். இது தான் எனது நிரந்தர வீடு என நம்புகிறேன்” என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Sunny Leone