Sunny Leone: மலையாள படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய சன்னி லியோன்!

சன்னி லியோன்

சன்னி லியோனுக்கும் கேரளாவுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம். முதன் முதலாக அவர் கேரளா வந்தபோது, திருச்சூர்பூரத்துக்கு கூடும் பக்தர்கள் போல் கூடிவிட்டனர் சேட்டன்கள்.

  • Share this:
    சன்னி லியோனுக்கும் கேரளாவுக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம். முதன் முதலாக அவர் கேரளா வந்தபோது, திருச்சூர்பூரத்துக்கு கூடும் பக்தர்கள் போல் கூடிவிட்டனர் சேட்டன்கள். அப்படியொரு கூட்டத்தை இதுவரை எந்த சினிமா நட்சத்திரமும் கேரளாவில் கண்டதில்லை. அதை நையாண்டி செய்து மலையாள சினிமாக்களிலேயே வசனங்கள் இடம்பெற்றன.

    கோவிட் கேரளாவில் வேகமாக பரவிவரும் நிலையில், படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார் சன்னி லியோன். இதுவொரு மலையாளப் படம். இதற்கு முன் மம்முட்டியின் மதுரராஜாவில் ஒரு பாடலுக்கு ஆடிய சன்னி லியோன், ரங்கீலா மலையாளப் படத்தில் நடித்தார். கோவிட் காரணமாக பாதி படப்பிடிப்புடன் படம் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில், Shero படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sunny Leone (@sunnyleone)






    இந்தப் படத்தை ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார். இதில் சன்னி லியோனின் வேடம் என்ன என்று கேட்டதற்கு தென்னிந்திய பெண்ணாக இதில் அவர் நடிக்கிறார் என்றார். ஷீரோ ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படம். படம் மலையாளத்தில் தயாரானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. ஏன், ஆங்கிலம் பிரெஞ்ச், ஸ்பானிஷில்கூட வெளியிடலாம். சன்னி லியோனின் ரசிகர்கள் இல்லாத நாடு ஏது.

    கேரளா வந்திருக்கும் சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராமில் பியூட்டி ஆஃப் கேரளா என இயற்கை பின்னணியில் தனது புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதனை 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: