முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சன்னி லியோன் நடிக்க விரும்பும் படம்...!

சன்னி லியோன் நடிக்க விரும்பும் படம்...!

சன்னி லியோன்

சன்னி லியோன்

மலையாளத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஸ்ரீஜித் இயக்கத்தில் Shero என்ற சைக்கலாஜிகல் த்ரில்லர் படத்தில் சன்னி லியோன் நடித்தார். இதில் சாரா மைக் என்ற அமெரிக்கவாழ் இந்திய வம்சாவனளி பெண்ணாக அவர் வருகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சன்னி லியோன் இந்தியில் அறிமுகமானாலும் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ், மலையாளத்தில் அவரை நாயகியாக்கி படங்கள் எடுக்கின்றனர். தமிழில் இரு சரித்திரப் படங்கள் அவரது நடிப்பில் வெளிவர உள்ளன. இரண்டும் நாயகி மையப் படங்கள்.

மலையாளத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஸ்ரீஜித் இயக்கத்தில் Shero என்ற சைக்கலாஜிகல் த்ரில்லர் படத்தில் சன்னி லியோன் நடித்தார். இதில் சாரா மைக் என்ற அமெரிக்கவாழ் இந்திய வம்சாவனளி பெண்ணாக அவர் வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விடுமுறைக்காக கேரளா வரும் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களே கதை. மூணாறை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தினர். செம்பன் வினோத் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களும் சன்னி லியோனுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Also read... ஷங்கர் படம் இயக்க தடைகேட்டு லைகா மேல் முறையீடு...!

படம் குறித்தும், அதில் நடித்த அனுபவம் குறித்தும் பேசிய சன்னி லியோன், Shero போன்ற படங்களில் நடிக்கவே அதிகம் விரும்புவதாகவும், இதுபோன்ற சவாலான வேடங்களில் நடிக்கையில் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிகிறது என்றும், இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் எனவும் கூறியுள்ளார்Shero மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

First published:

Tags: Actress Sunny Leone