ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''மோடியுடன் சேர்ந்து இந்த பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டுங்க'' - யோகியிடம் ரஜினிகாந்த் பட நடிகர் கோரிக்கை - அப்படி என்ன பிரச்னை?

''மோடியுடன் சேர்ந்து இந்த பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டுங்க'' - யோகியிடம் ரஜினிகாந்த் பட நடிகர் கோரிக்கை - அப்படி என்ன பிரச்னை?

பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்

திரையுலகில் 99 சதவிகிதம் பேர் நல்லவர்கள். யோகி ஜி, இதுகுறித்து தயவுசெய்து பிரதமர் மோடியுடன் பேசி இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்டுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ச்சியாக இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பிவருவதாக கூறி, தொடர்ந்து பாய்காட் செய்வது வழக்கமான ஒன்றாகியுள்ளது. ஆமிர் கானின் 'லால் சிங் சத்தா', ரன்பீர் கபூர் - ஆலியா பட் இணைந்து நடித்த 'பிரம்மாஸ்திரா' படங்களுக்கு எதிராக பாய்காட் கோஷங்கள் எழுந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. 'ஆதி புருஷ்' பட டீசரில் இந்து கடவுள்களான ராமன், அனுமன் போன்றோர் கார்டூன் கதாப்பாத்திரங்களைப் போல சித்தரித்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது.

இதே போல ஷாருக்கான் - தீபிகா படுகோன் இணைந்து நடித்த 'பதான்' படத்திலிருந்து பேஷாராம் ரங் என்ற பாடல் வெளியாகி சர்ச்சையானது. பாடலில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையணிந்திருந்தார். இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி எதிர்ப்பு கிளம்பியது. அகமதாபாத் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 'பதான்' படத்தின் விளம்பர பதாகைகள் கிழித்து எறியப்பட்டன. ஜாக்ரன் மஞ்ச் அமைப்பினர் குஜராத் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்தப் படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார். அவரிடம், பாய்காட் பாலிவுட் என்ற டிரெண்ட் திரையுலகினரை கடுமையாக பாதித்துள்ளது. இது எனக்கு மனவலியை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிராக நீங்கள் சொன்னால் இந்த டிரெண்ட் நின்றுவிடும். நாங்கள் நல்ல பணிகளை செய்துவருகிறோம். திரையுலகில் 99 சதவிகிதம் பேர் நல்லவர்கள். தயவுசெய்து யோகி ஜி, இதுகுறித்து பிரதமர் மோடியுடன் பேசி இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்டுங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி

நாம் இணைந்து பாய்காட் பாலிவுட் என்ற டிரெண்டிற்கு முடிவு கட்டவேண்டும். நாங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. இந்த களங்கத்திலிருந்து எங்களைக் காப்பாற்றும் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். நீங்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்.

நான் இப்பொழுது இருக்கும் நிலைக்கு உத்தரபிரதேச மக்கள்தான் காரணம். இங்கே படத்துக்கு திரையரங்குகளில் கூடும் கூட்டத்தைப் பொறுத்து மற்ற இடங்களில் இந்தப் படம் எப்படி ஓடும் என்பதை கணிக்க முடியும்'' என்று பேசினார். அப்போது சுனில் ஷெட்டியுடன் பாலிவுட் நட்சத்திரங்களான ஜாக்கி ஷெராஃப், போனி கபூர், சோனு நிகம் தேஜ் கிரண், ஓம் ராவுத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'தர்பார்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் சுனில் ஷெட்டி. ஏற்கனவே '12பி' படத்திலும் சிறிய வேடத்தில் அவர் நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நாயகனாக சுனில் ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் சுனில் ஷெட்டி நடித்துவருகிறார். இவரது மகள் ஆதியா ஷெட்டி திரைப்படங்களில் நடித்துவருகிறார். ஆதியாவும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் இருந்துவருகின்றனர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Narendra Modi, Yogi adityanath