Vadivelu: இரண்டாம் பாகமாக உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’!

சுந்தரா டிராவல்ஸ்

முரளி காலமாகிவிட்ட நிலையில் அவரது கதாபாத்தில் கருணாகரனும், வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் உருவாகும் சீசன் இது. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்தின் பில்லா, கமலின் விஸ்வரூபம், தனுஷின் வேலை இல்லா பட்டதாரி, விஷாலின் சண்டக்கோழி, சுந்தர் சி-யின் அரண்மனை, விக்ரமின் சாமி உள்ளிட்ட படங்களும் 2 பாகங்களாக வெளியாகியுள்ளன. குறிப்பாக சூர்யாவின் சிங்கம் மற்றும் லாரன்ஸின் காஞ்சனா ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பால், தொடர்ச்சியாக 3 பாகங்கள் வெளியாகின.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு முரளி, வடிவேலு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது முரளி காலமாகிவிட்ட நிலையில் அவரது கதாபாத்தில் கருணாகரனும், வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: