• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மைக்கேல் - விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனின் பான் இந்தியா திரைப்படம்!

மைக்கேல் - விஜய் சேதுபதி, சந்தீப் கிஷனின் பான் இந்தியா திரைப்படம்!

விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன்

விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன்

தி பேமிலி மேன் சீரிஸை உருவாக்கிய ராஜ் & டிகேயின் அடுத்த வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் சந்தீப் கிஷனும் நடிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய் சேதுபதியின் முதல் பான் இந்தியா திரைப்படத்தின் பெயர் மற்றும் இயக்குனர் விவரத்தை அறிவித்துள்ளனர்.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இதன் பெயர் மற்றும் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு மைக்கேல் என்று பெயர் வைத்துள்ளனர். உண்மையில் இந்தப் படத்தின் நாயகனாக நடிப்பவர் சந்தீப் கிஷன். விஜய் சேதுபதி முக்கியமான ஆக்ஷன் ரோல் ஒன்றில் நடிக்கிறார். மைக்கேல் என்பது, படத்தில் சந்தீப் கிஷனின் கதாபாத்திரப் பெயர் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், கரன் சி புரொடக்ஷன்ஸ் இணைந்து மைக்கேலை தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. அந்தவகையில் விஜய் சேதுபதியின் முதல் பான் இந்தியா திரைப்படம் இது என்று கூறலாம்.



Also read... அக்ஷய் குமாரின் ஸ்பை த்ரில்லருக்கு அரபு நாடுகள் தடை...!

தி பேமிலி மேன் சீரிஸை உருவாக்கிய ராஜ் & டிகேயின் அடுத்த வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் சந்தீப் கிஷனும் நடிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. சந்தீப் கிஷன் தி பேமிலி மேன் முதல் சீஸனில் ராணுவ அதிகாரியாக ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மைக்கேல் இவர்கள் இணையும் இரண்டாவது படைப்பு

மைக்கேலில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: