சந்தீப் கிஷன் நடிப்பில் மாயவன் ரீலோடட் - சி.வி.குமார் அறிவிப்பு

சந்தீப் கிஷன்

2013-ல் யாருடா மகேஷ்? படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கிஷன்.

 • Share this:
  தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளான இன்று, மாயவன் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சி.வி.குமார்.

  திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் படங்கள் தயாரித்து வந்த சி.வி.குமார் மாயவன் படத்தின் மூலம் இயக்குனரானார். ஒரு உடம்பிலிருந்து இன்னொரு உடம்புக்கு உயிர் கூடுவிட்டு பாயும் அம்புலி மாமா கதையை அறிவியல் பின்புலத்தில் மாயவனில் சொல்லியிருந்தார். இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்தார்.

  இன்று சந்தீப் கிஷனின் 34-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு மாயவன் ரீலோடட் என மாயவனின் இரண்டாம் பாக அறிவிப்பை சி.வி.குமார் வெளியிட்டுள்ளார். 2013-ல் யாருடா மகேஷ்? படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கிஷன். மாநகரம், மாயவன் படங்களில் நடித்துள்ளார். தமிழைவிட தெலுங்கில் இவர் பிரபலம். தெலுங்கில் அவர் நடிக்கயிருக்கும் படத்தின் அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளனர்.

  மாயவன் ரீலோடட் திரைப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராக உள்ளதாக சி.வி.குமார் கூறியுள்ளார். மாயவன் போன்று சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: