ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay Sethupathi: விஜய் சேதுபதி தானே எப்போதும் முத்தம் தருவாரு... வைரலாகும் படம்!

Vijay Sethupathi: விஜய் சேதுபதி தானே எப்போதும் முத்தம் தருவாரு... வைரலாகும் படம்!

விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுக்கும் சந்தீப் கிஷன்

விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுக்கும் சந்தீப் கிஷன்

தி பேமிலி மேன் தொடரை உருவாக்கி, இயக்கிய ராஜ் & டிகேயின் புதிய வெப் தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணாவுடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விஜய் சேதுபதியும், சந்தீப் கிஷனும் அன்பு மிகுதியில் கட்டியணைத்து முத்தமிடும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சந்தீப் கிஷன், மாநகரம் படத்தில் தனிப்பெரும் ஹீரோவாக உருவாகி நின்றார். தொடர்ந்து நடித்த மாயவன் சரியாகப் போகவில்லை. எனினும், தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

  Sundeep Kishan, Sundeep Kishan movie, Sundeep Kishan next movie, Sundeep Kishan movies, Sundeep Kishan vijay sethupathi, Sundeep Kishan vijay sethupathi kissing, சந்தீப் கிஷன், சந்தீப் கிஷன் மாயவன் ரீலோடட், சந்தீப் கிஷன் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் விஜய் சேதுபதி முத்தம்
  விஜய் சேதுபதி - சந்தீப் கிஷன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தி பேமிலி மேன் தொடரை உருவாக்கி, இயக்கிய ராஜ் & டிகேயின் புதிய வெப் தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணாவுடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அதில் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷனும் நடிக்க உள்ளார். அந்த சந்திப்பின் போது அன்பு மிகுதியில் விஜய் சேதுபதியும், சந்தீப் கிஷனும் கட்டித்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர். இந்தப் புகைப்படங்களை சந்தீப் கிஷன் இணையத்தில் வெளியிட, ரசிகர்கள் உற்சாகத்துடன் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

  சந்தீப் கிஷனின் ரசிகர்கள் படத்தை பகிர்வதுடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளனர். தி பேமிலி மேன் முதல் சீஸனில் சின்ன கதாபாத்திரம் ஒன்றில் சந்தீப் கிஷன் நடித்திருப்பார். அது போல் கௌரவ வேடத்தில் நடிக்காமல், இந்த வெப் தொடரிலாவது முழுவதும் வருவது போல் ஒரு கதாபாத்திரத்தில் நடியுங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi