ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: விஜய் சேதுபதி - சந்தீப் கிஷனின் மைக்கேல் ட்ரைலர்!

WATCH: விஜய் சேதுபதி - சந்தீப் கிஷனின் மைக்கேல் ட்ரைலர்!

மைக்கேல் ட்ரைலர்

மைக்கேல் ட்ரைலர்

மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யங்கா கவுசிக் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மைக்கேல் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் படத்தைத் தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதோடு ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

' isDesktop="true" id="877210" youtubeid="HBTaKskrt9w" category="cinema">

தமிழில் நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார் - மஞ்சு வாரியர்

மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யங்கா கவுசிக் நடித்துள்ளார். இவர்களுடன் கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay Sethupathi