முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஓடிடி-யில் வெளியாகவிருக்கும் சந்தீப் கிஷன் - விஜய் சேதுபதியின் மைக்கேல்!

ஓடிடி-யில் வெளியாகவிருக்கும் சந்தீப் கிஷன் - விஜய் சேதுபதியின் மைக்கேல்!

மைக்கேல்

மைக்கேல்

மைக்கேல் படம் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மைக்கேல்’ திரைப்படம் விரைவில் OTT-ல் வெளியாகவிருக்கிறது.

சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் திவ்யன்ஷா கௌசிக், கவுதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ஐயப்பா பி.சர்மா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு முறையே கிரண் கௌஷிக் மற்றும் ஆர்.சத்தியநாராயணன் கையாண்டிருந்தனர்.

மைக்கேல் படம் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியான 20 நாட்களுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியாகவிருக்கிறது. சந்தீப் கிஷனின் தொழில் வாழ்க்கையின் சிறந்த தொடக்கமாக வெளியான முதல் வாரத்தில் படம் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இப்படம், வரும் 24-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: