இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல்துறைகளில் பணியாற்றிவரும் சுந்தர் சி. நேற்று தனது பிறந்தநாளை தலைநகரம் 2 படப்பிடிப்புத்தளத்தில் கொண்டாடினார்.
1995 இல் முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனரான சுந்தர் சி. தனது நகைச்சுவை காட்சிகளால் பிரபலமானார். எந்த மொழிப் படத்திலிருந்தும் காட்சிகளை எடுத்து தனது படங்களில் திறமையாகப் பயன்படுத்துகிறவர். இவர் இயக்கிய படங்களில் 70 சதவீதம் பிற படங்களின் இன்ஸ்பிரேஷனில் உருவானவை.ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடிகராக தலைகாட்டியவர் தனது மனைவி குஷ்புவின் விருப்பத்தின்படி 2006 இல் தலைநகரம் படத்தில் நாயகனானார்.
இதையும் படிங்க.. சிக்கியது ஆதாரம்.. தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை!
சுராஜ் இயக்கிய இந்தப் படம் வடிவேலின் நகைச்சுவையால் பரவலான கவனிப்பை பெற்று ஓடியது. அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்தவர், ஒருகட்டத்தில் ரசிகர்கள் மீதிருந்த நல்லெண்ணத்தால் மீண்டும் இயக்கத்துக்கு திரும்புவதாக அறிவித்தார். கலகலப்பு படத்தை எடுத்தார். இனி படம் மட்டுமே இயக்குவார் என்ற நம்பிக்கையை அவ்வப்போது தகர்த்து வந்தவர் தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இதையும் படிங்க.. பிக் பாஸ் கேள்விகளுக்கு கிடைக்காத பதில்
தலைநகரம் 2 திரைப்படம் உள்பட பல படங்கள் அவரது நடிப்பில் தயாராகி வருகின்றன.தலைநகரம் 2 படத்தை சுந்தர் சி.யை வைத்து இருட்டு படத்தை எடுத்த துரை இயக்கி வருகிறார். நேற்று இந்தப் படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சுந்தர் சி. கொண்டாடினார். இந்த நிகழ்வில் துரை உள்ளிட்ட படக்குழுவினருடன், குஷ்பு, ஹிப் ஹாப் ஆதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.