• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுந்தர் சி-யின் தலைநகரம் 2 பூஜையுடன் தொடங்கியது!

சுந்தர் சி-யின் தலைநகரம் 2 பூஜையுடன் தொடங்கியது!

தலைநகரம் 2

தலைநகரம் 2

தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

  • Share this:
    நடிகர் சுந்தர் சி-யின் ‘தலைநகரம் 2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

    ‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். நடிகை ஜோதிர்மயி ஹீரோயினாக நடித்திருந்த இந்தப் படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்

    தலைநகரம் படத்தில் இடம்பெற்ற ‘நானும் ரவுடி தான்’, ‘நாய் சேகர்’ போன்ற வசனங்கள் படத் தலைப்பாக மாறும் அளவுக்கு, இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளன. இந்நிலையில், தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    முதல் பாகத்தின் இயக்குநர் சுராஜ் தற்போது வடிவேலுவின் புதிய படத்தை இயக்கி வரும் நிலையில், ‘தலைநகரம் 2’ படத்தை இயக்குநர் வி.இசெட்.துரை இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜித்தின் ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தலைநகரம் படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் முக்கியப் பங்கு வகித்தன. அதே போல், தலைநகரம் 2 படத்திலும் வடிவேலு நடிப்பாரா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: