• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் 3 ஹீரோக்கள்.. இன்று தொடங்குகிறது ஷூட்டிங்..

சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் 3 ஹீரோக்கள்.. இன்று தொடங்குகிறது ஷூட்டிங்..

மாயா பஜார் படக்குழு

மாயா பஜார் படக்குழு

சுந்தர்.சி அவ்னி மூவிஸ் சார்பாக நான் சிரித்தால், மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கும் நிலையில் அவர் தயாரிக்கும் 6-வது படமாக மாயாபாஜார் தமிழ் ரீமேக் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

  • Share this:
    ‘ஆக்‌ஷன்’ படத்தைத் தொடர்ந்து ‘அரண்மனை 3’ படத்தை இயக்கி தயாரித்து வருகிறார் சுந்தர்.சி. இந்தப் படத்தில் ஆர்யா, ஆன்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து விரைவில் தொடங்க இருக்கிறது.

    இதனிடையே புதிய படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளார் சுந்தர்.சி. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாயா பஜார்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் உள்ளிட்ட 3 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். ஸ்ருதி என்பவர் நாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சுந்தர்.சி.யின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பத்ரி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படம் க்ரைம் காமெடி ஜானரைச் சார்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    சுந்தர்.சி அவ்னி மூவிஸ் சார்பாக நான் சிரித்தால், மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கும் நிலையில் அவர் தயாரிக்கும் 6-வது படமாக மாயாபாஜார் தமிழ் ரீமேக் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: