சுந்தர் சி. மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். ஏற்கனவே சில படங்களில் நடித்து வருகிறவர் ஒன் 2 ஒன் என்ற புதிய படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.24 HRS புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுந்தர் சி. ஜோடியாக ராகினி திவேதி நடிக்கிறார். இவர் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். 2009 முதல் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அறியான், ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ராகினியின் பெயரும் அடிபட்டது. இதனைத் தொடர்ந்து, 2020 செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி தி சென்ட்ரல் க்ரைம் பிராஞ்சை சேர்ந்த அதிகாரிகள் ராகினியின் பெங்களூரு வீட்டை சோதனையிட்டனர். அன்றே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 140 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
இப்போதும் ராகினி மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போதைப் பொருள் கடத்தில் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராகினி திவேதியை ஒன் 2 ஒன் படத்தின் நாயகியாக்கியிருக்கிறார்கள். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, மானஸ்வி உள்பட மேலும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய திருஞானம் ஒன் 2 ஒன் படத்தை இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்க, விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இதன் பூஜை சென்னையில் நடந்தது. படத்தில் வில்லனாக நடிக்க பொருத்தமான நடிகரை தேடி வருகின்றனர். இம்மாதமே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.