சுந்தர் சி – ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாம் பூச்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர் சி சமீப காலமாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சுந்தர் சி நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த அரண்மனை 3 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அடுத்ததாக ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரை காஃபி வித் காதல் என்ற படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சுந்தர் சி, ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி படம் வரும் 24-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் பட்டாம் பூச்சி படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க - மாலத்தீவில் நடிகை அனுஷ்கா சர்மா - வைரலாகும் நியூ கிளிக்ஸ்!
பத்ரி இயக்கியுள்ள இந்த படத்தை குஷ்புவின் அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. சைக்கோ த்ரில்லர் ஜேனரில் பட்டாம்பூச்சி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது, படத்தின் வெளியீட்டிற்காக இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. முன்னதாக பட்டாம்பூச்சி திரைப்படம் மே 13-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Also read... சந்திரமுகி 2-க்கு இசையமைக்கும் பாகுபலி இசையமைப்பாளர்!
இதேபோன்று அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான யானை திரைப்படத்தின் வெளியீடு ஜூலை 1-ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திரைப்படம் ஜூன் 17-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பட்டாம்பூச்சி படம் வெளியாகும் ஜூன் 24 ம் தேதியன்று, சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படமும் ரிலீஸ் ஆகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.