Home /News /entertainment /

சுந்தர் சி.-யின் காஃபி வித் காதல் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சுந்தர் சி.-யின் காஃபி வித் காதல் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

காஃபி வித் காதல் படத்தின் போஸ்டர்

காஃபி வித் காதல் படத்தின் போஸ்டர்

Coffee with Kadhal : சுந்தர்.சி - ஜெய் -ஜீவா கூட்டணியில் வெளியான கலகலப்பு 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் Coffee with Kadhal திரைப்படத்தின் முதல் பாடல் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் Coffee With Kadhal.

இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இவர் இசையில் உருவாகியிருக்கும் முதல் பாடலை வெள்ளிக்கிழமை வெளியிடுகின்றனர்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சுந்தர்.சி - ஜெய் -ஜீவா கூட்டணியில் வெளியான கலகலப்பு 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக காபி வித் காதல் திரைப்படத்திற்காக இந்த மூவர் கூட்டணி அமைந்துள்ளது.



மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணவர் வித்யாசாகருக்கு பிரியா விடை அளித்த நடிகை மீனா

சுந்தர்.சி இயக்கும் காபி வித் காதல் திரைப்படத்தை அவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி