• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sunaina: ’அதைப் பத்தி பேசுறத நிறுத்துங்க’ சுனைனாவை கோபப்படுத்திய அந்த விஷயம்...

Sunaina: ’அதைப் பத்தி பேசுறத நிறுத்துங்க’ சுனைனாவை கோபப்படுத்திய அந்த விஷயம்...

சுனைனா

சுனைனா

தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் முதலில், இதைப்பற்றி பேசுவதை நிறுத்துங்கள் என்றும் நடிகை சுனைனா கூறியுள்ளார்.

  • Share this:
    தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் முதலில், இதைப்பற்றி பேசுவதை நிறுத்துங்கள் என்றும் நடிகை சுனைனா கூறியுள்ளார்.

    காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதையடுத்து நீர் பறவை, வம்சம், சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்ட உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அவர் நடித்த சில்லுக்கருப்பட்டி படத்தில் சுனைனாவின் நடிப்பு பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது. லாக்டவுன்னுக்கு பின்னர் டிரிப் என்ற திரைப்படத்தில் நடித்த அவர், இப்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழிலும் பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் சுனைனாவுக்கு திருமணம் என்று வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர், ”கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குநர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்றார்.

    மேலும் தொடர்ந்த அவர், தனது திருமணம் பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு, தனது திரைப்படங்கள் குறித்து பேச வேண்டும். இப்போதைக்கு தான் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: