• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sun TV Network: கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி குழுமம் ரூ.10 கோடி நன்கொடை!

Sun TV Network: கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி குழுமம் ரூ.10 கோடி நன்கொடை!

முதல்வரிடம் காசோலை வழங்கிய கலாநிதி மாறன்

முதல்வரிடம் காசோலை வழங்கிய கலாநிதி மாறன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

  • Share this:
    தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமத்தின் சார்பில் ரூ.10 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தற்போது கொரோனா 2-ம் அலை மிக தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு 30,000-த்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.



    இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண தொகையாக ரூ.10 கோடிக்கான காசோலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: